தண்டையார்பேட்டை: புதுவண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதி 39ஆவது வார்டு 40வது வார்டில் மழை நீரை அகற்ற ராட்சச மோட்டார்கள் அமைக்கப்பட்டுள்ளது
புது வண்ணாரப்பேட்டை கிராஸ் ரோடு பகுதி 39 40 ஆவது வார்டு காவலர் குடியிருப்பு பகுதியில் தொடர்ச்சியாக மழை பெய்தால் இடுப்பளவுக்கு மழைநீர் நிற்பது வழக்கம் எம் எல் ஏ எபினேசர் மற்றும் மண்டல குழு தலைவர் முயற்சியால் மாநகராட்சி சார்பில் இதனை அகற்றுவதற்கு இரண்டு ராட்சச மோட்டார்கள் அமைக்கப்பட்டு அங்கு மழை நீரை அகற்றி வருகின்றனர் இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.