வந்தவாசி: வந்தவாசி உழவர் சந்தை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது; பொதுமக்கள் அச்சம்!
வந்தவாசியில் பெய்த தொடர் மழையால் உழவர் சந்தையின் 20 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இடிந்து விழுந்த சுவரை அகற்றிவிட்டு, புதிய சுவர் அமைக்க வேண்டும் என நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.