போச்சம்பள்ளி: மத்தூரில் அனுமதியின்றி மணல் கடத்திய லாரி பறிமுதல் - 2 பேர் மீது வழக்கு
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், அரசு அனுமதியின்றி மணல் கடத்திய லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். 12 யூனிட் மணல் கடத்திய விவகாரத்தில், தப்பி ஓடிய ஓட்டுநர் உட்பட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.