ஆம்பூர்: அரங்கல்துருகம் பகுதியில் ஆடுகள், கன்றுகுட்டிகள், கோழிகளை கடித்து குதறிய தெருநாய்கள் இறந்துபோன ஆட்டுக்குட்டியுடன் புகார் அளிக்க சென்ற நபரால் பரபரப்பு
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் கோடீஸ்வரன் என்பவர் தனது 5 ஏக்கர் நிலத்தில் ஆடு,மாடு கோழிகளை வளர்த்து வரும் நிலையில் இரவு நேரங்களில் தெருநாய்கள் கோடீஸ்வரன் நிலத்திற்கு சென்று அங்கு உள்ள ஆடு, கன்றுகுட்டிகள், கோழிகளை கடித்து குதறி உள்ளது. இந்த நிலையில் இன்று மாலை இறந்துபோன ஆட்டுக்குட்டியுடன் உமராபாத் காவல் நிலையத்திற்கு கோடீஸ்வரன் புகார் அளிக்க சென்ற சம்பவத்தால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.