விளவங்கோடு: கன்னியாகுமரி: 3 நாட்களாகத் தொடரும் மழை - குளிர்ச்சியான சூழலில் மக்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தேங்காய்ப்பட்டினம், குளச்சல், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது.