ஆம்பூர்: மின்னூர் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென டயர் வெடித்து சாலை நடுவே கவிழ்ந்து விபத்து
ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த கார் இன்று காலை திடீரென காரின் பின்பக்க டயர்வெடித்து பஞ்சராகி சாலையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தகவல் அறிந்து வந்த கிராமிய போலீசார் மற்றும் நெடு சாலை துறையினர் கிரேன் இயந்திரம் மூலம் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.