கோவை வடக்கு: கோவை ஜெம் மருத்துவமனையில் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்ட ரோஸ் தினம்!
கோவை பங்கஜா மில் சாலையில் உள்ள ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ரோஸ் தினம் கொண்டாடப்பட்டது. சிகிச்சையை முடித்த 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், பெண்களுக்கான இலவச மாமோகிராம் திட்டமும் தொடங்கப்பட்டது.