திண்டுக்கல் கிழக்கு: கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே கூலி தொழிலாளியிடம் உடைந்த பீர் பாட்டிலை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 வாலிபர்கள் கைது
திண்டுக்கல்லை சேர்ந்த கூலிதொழிலாளி ஜோதிகுமார் இவர் கோவிந்தாபுரம் சுடுகாடு அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு வந்த தேனி, உத்தமபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணன் ராமநாதபுரம் முதுகுளத்தூரை சேர்ந்த முனியசாமி இருவரும் தாங்கள் பெரிய ரவுடிகள் என்று கூறி உடைந்த பீர்பாட்டிலை காட்டி கொலை மிரட்டல் விடுத்து உயிர் பயத்தை பணம் பறிக்க முயன்றதாக ஜோதிகுமார் அளித்த புகாரின் பேரில் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் 2 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்