செங்கல்பட்டு: திருப்போரூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர்.
அதிமுக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.சீனிவாசன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் ஆகியோர் தலைமையில் இள்ளலூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் தங்களை அதிமுகவில் இணைத்து கொண்டனர்.