காளையார்கோவில்: இளையான்குடி ரோட்டில் இருசக்கர வாகனம் மீது டாட்டா ஏஸ் வாகனம் மோதியதில் ஒருவர் படுகாயம்
மறவமங்கலம் அண்ணாநகரை சேர்ந்த நாகராஜன் அவரது இரு சக்கர வாகனத்தில் காளையார் கோவில்-இளையான்குடி ரோட்டில் சென்று கொண்டிருந்த போது, தாயமங்கலத்தை சேர்ந்த சபரி என்பவர் ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் நாகராஜனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் நாகராஜன் படுகாயம் அடைந்து, சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காளையார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.