சாத்தான்குளம்: வெங்கடேஸ்வரபுரம் முனைஞ்சிப்பட்டி சாலையில் கோவிலில் கொள்ளை போலீசார் விசாரணை
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் பகுதியில் இருந்து முனைஞ்சிப்பட்டி செல்லும் சாலையில் சுந்தராட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று இரவு புகுந்த கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து அறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.