பழனி: பழனி திருக்கோயிலில் 1ம் தேதி பகல் 11 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி கோவில் நிர்வாகம் அறிவிப்பு
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் 22 முதல் 1ம் தேதி வரை நடைபெறும் நவராத்திரி விழாவை முன்னிட்டு 1 ம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை நண்பகல் 12 மணிக்கும் சாயரட்சை பூஜை பிற்பகல் 1.30 மணிக்கும் 3.00 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு பராசக்தி வேல் புறப்பட்டு கோதைமங்கலம் சென்று அம்பு போடும் நிகழ்வு நடைபெறும். 01.10:2025 அன்று காலை 11.30 மணியளவில் அனைத்து தரிசன கட்டணச்சீட்டுகளும் நிறுத்தப்படும். படிப்பாதை, வின்ச், ரோப்காரில் வரும் பக்தர்கள் காலை 11.00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்