தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை எம் சி ரோட்டில் துணி வாங்கு வந்தவர்கள் தவறவிட்ட தங்க சங்கிலியை திருப்பிக் கொடுத்த ஊழியர்களுக்கு குவியும் பாராட்டு
வண்ணாரப்பேட்டை எம் சி ரோடு பகுதியில் துணிக்கடையில் வேலை செய்யும் இளைஞர்கள் சாந்தகுமார் மற்றும் மணி ஆகியோர் அமுதா கீர்த்தனா ஆகியோர் தொலைத்த தங்க சங்கிலியை கண்டெடுத்து அங்கு சங்கிலிக்கான ஆதாரத்தை பெற்றுக்கொண்டு வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் சங்கிலியை அவர்களிடம் ஒப்படைத்தனர். இதற்காக எம்சி ரோடு ஜி ஏ ரோடு சுற்றுவட்டார வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் தமிமுன் அன்சாரி துணைத் தலைவர் பழனி ஆகியோர் இளைஞர் இருவரையும் சால்வை அணிவித்து கைதட்டி பாராட்டினர்.