மயிலாடுதுறை: குத்தாலம் தாலுக்கா கந்தமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழு ஈரப்பத தொடர்பு குறித்து ஆய்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் குத்தாலம் தாலுக்காவில் கந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இந்திய தானிய சேமிப்பு மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் துணை இயக்குநர் பி.கே.சிங்க் தலைமையிலான மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.  ஆய்வின்போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண்மை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, மயிலாடுதுறை எம்பி சுதா , மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் உட்பட பலர் உடன் இருந்தனர்.