போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி புலியூர் ஏரிக்கரையில் ஆபத்தான மருத்துவக் கழிவுகள்: அச்சத்தில் பொதுமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் ஏரிக்கரையில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளால், நிலத்தடி நீர் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை அகற்றக் கோரி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.