கோவில்பட்டி: அரசு தலைமை மருத்துவமனையில் பிரதமர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்
பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 ஆவது பிறந்தநாள் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளால் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் இரத்ததான முகாம் நடைபெற்றது இந்த முகாமில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆர்வமுடன் ரத்த தானம் செய்கிறார் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் பல்வேறு நலத்திட்ட முகாம்கள் நடைபெற்றது.