மதுரை கிழக்கு: ஊழல் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய வேண்டும்: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களைப் பறிமுதல் செய்தால் மட்டுமே அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சம் ஏற்படும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும், லஞ்ச வழக்குகளில் சிக்கியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பி.புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.