ஸ்ரீவைகுண்டம்: கருங்குளம் பகுதியில் கனமழை காரணமாக மூலக்கரைப்பட்டி செல்லும் சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், கனமழை பெய்தது. இந்நிலையில், கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி வரை செல்லும் பிரதான சாலையில் தண்ணீர் இடுப்பளவு தேங்கிய நிலையில் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.