நாமக்கல்: நாமக்கல்லில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ₹2 அதிகரித்து, ஒரு கிலோ ₹136 ஆக விலை நிர்ணயம்
சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தியாகும் கறிக்கோழிக்கு தினசரி மாலை பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூடி பண்ணை கொள்முதல் விலையை அறிவிக்கின்றனர். இன்று மாலை நடைபெற்ற கூட்டத்தில் நாமக்கல் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை ₹2 அதிகரித்து ஒரு கிலோ ₹136 ஆக விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளனர்.