யூடியூபர் மூக்தார் கடந்த சில தினங்களுக்கு முன்பு காமராஜர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் உடனடியாக அவரை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு பாண்டியனார் மக்கள் இயக்கம் சார்பில் தலைவர் சீனி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தொடர்ந்து யூடியூபர் மூக்தாரை கைது செய்ய வேண்டுமென கோஷங்கள் எழுப்பினர்.