கோவில்பட்டி: ஊரணி தெருவில் மது போதையில் தந்தையை பிளேடால் வெட்டி கொன்ற மகன்
கோவில்பட்டி ஊரணி 2வது தெரு பகுதியில் முனியசாமி என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (செப்.14) நள்ளிரவு இவருக்கும் இவரது மகன் ராஜீவ் காந்திக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில் ராஜீவ் காந்தி பிளேடு மற்றும் கத்தியால் முனியசாமியை கொலை செய்து கிழக்கு காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுக்குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.