பாளையங்கோட்டை: நெல்லையில் கோலாகலமாக நடந்த மராத்தான் போட்டி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
நெல்லை காவேரி மருத்துவமனை சார்பில் 5-வது ஆண்டாக நடைபெற்ற 'இதயத்திற்காக ஓடுங்கள்' மராத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் கொடியசைத்து தொடங்கி வைத்த இந்த போட்டியில், பங்கேற்பாளர்கள் 5 கி.மீ தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.