கோவில்பட்டி: ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டம்
பிக்கிலிப்பட்டி கிராமத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என கூறப்படுகிறது இந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் உடனே செய்து தர வேண்டும் எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் மாவட்ட குழு உறுப்பினர் ராகவன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர் தொடர்ந்து கோரிக்கை மனுவை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வழங்கினர்.