அரியலூர்: முதியோர்களின் தேவைகளை நிறைவேற்றுவது அவசியம்: அரியலூர் ஆட்சியர் வலியுறுத்தல்
அரியலூர் கொல்லாபுரம் முதியோர் இல்லத்தில் சர்வதேச முதியோர் தின விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி, முதியோர்களின் உடல்நலம், மனநலம் மற்றும் அன்றாடத் தேவைகளை கவனித்து அவர்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.