திருப்பத்தூர்: குருமன்ஸ் இன மக்களுக்கு ST சாதி சான்றிதழ் வழங்க கோரி பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக மனு
திருப்பத்தூர் மாவட்ட பாஜகவின் எஸ்டி பிரிவு சார்பில் மாவட்டத்தில் உள்ள குருமன்ஸ் இன மக்களுக்கு STசாதி சான்றிதழ் வழங்க கோரி இன்று திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பேரணி நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக பாஜகவின் ST பிரிவு மாநில பொதுச் செயலாளர் பண்பு கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தனர். இந்த பேரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. பின்னர் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.