மயிலாடுதுறை: போலியோ விழிப்புணர்வு நடைப்பயணம் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரோட்டரி சங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் நடைபெற்றது
போலியோ இல்லாத புதியதொரு உலகை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மயிலாடுறையில் ரோட்டரி சங்கம் மற்றும் சமூக நல அமைப்புகள் சார்பில் விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது.  மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய நடைபயணம் கச்சேரிசாலை, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு வழியாக மீண்டும் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தை வந்தடைந்தது.   தொடர்ந்து “சிறு துளிகள்” என்ற போலியோ விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது.