பெரம்பலூர்: ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கட்டடங்கள் - மாவட்ட ஆட்சியர் ஆய்வு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு அலுவலகங்கள், மாதிரிப் பள்ளி மற்றும் விடுதி கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் அப்துல் ராசிக் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனாளிக்கு மோதிரம் வழங்கினார்.