நாகப்பட்டினம்: வங்க கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது
தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மோந்தா புயலாக வலுவடைந்துள்ளது இந்த புயல் இன்று இரவு ஆந்திராவில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் வங்கக்கடலில் சூறைக்காற்று வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்த நிலையில் நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினம் வேளாங்கண்ணி வேதாரண்யம் கோடியக்கரை நாகூர் உள்ளிட்ட இடங்களில் கடல் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.