செங்கம்: கரிமலைப்பாடியில் தேமுதிக சார்பில் இலவச மருத்துவ முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம், கரிமலைப்பாடி அங்கன்வாடி மையத்தில் தேமுதிக 22-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்களுக்கு பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.