கொடைக்கானல் நகரில் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு மாடுகள் சர்வசாதாரணமாக உலா வந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பிரம்மாண்ட கொம்புகள் உள்ள காட்டு மாடுகளை கண்டவுடன் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஓட்டம் பிடித்தனர். உள்ளூர் பொதுமக்களுக்கு இது பழகிப் போய்விட்டதால் பயமின்றி ரசித்தனர். சிலர் செல்போனில் படம் பிடித்தனர்