பழனியில் போதை மற்றும் புகையிலை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை காவல்துறை கண்காணிப்பாளர் தனஜெயன் கொடியசைத்து தூக்கி வைத்தார். பெரியவர்கள் சிறியவர்கள் என இரு பிரிவுகளாக நடைபெற்ற இந்த மாரத்தான் போட்டி பழனியாண்டவர் ஆண்கள் கலைக் கல்லூரியில் துவங்கி கோயமுத்தூர் புறவழிச் சாலையில் நடைபெற்றது. பெரியவர்களுக்கு 12 கிலோமீட்டர் தூரமும் சிறியவர்களுக்கு ஐந்து கிலோமீட்டர் தூரமும் நிர்ணயப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.