கோவை வடக்கு: அரசு காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை: இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்ய பிரகாஷ் எச்சரிக்கை
நாடு முழுவதும் காலியாக உள்ள 50 லட்சத்திற்கும் அதிகமான அரசு பணியிடங்களை அடுத்த ஓராண்டுக்குள் நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் சூர்ய பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அவர் எச்சரித்துள்ளார்.