ஆம்பூர்: நகராட்சி அலுவலகத்தில் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றகோரி நகரமன்ற தலைவரிடம் மனு அளித்த பொதுமக்கள்
ஆம்பூர் சாமியார்மடம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயை ஆக்கிரமித்து சிலர் வீடுகள் கட்டியுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் குடியிருப்பு பகுதியில் தேங்கி, குடியிருப்புகளுக்குள் நுழைவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் உடனடியாக கால்வாய்களை ஆக்கிரத்து கட்டப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் இன்று பிற்பகல் ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் ஆம்பூர் நகர்மன்ற தலைவரிடம் மனு அளித்தனர்.