வாணியம்பாடி: ஜீவாநகர் பகுதியில் கோழி வியாபாரி வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 1/2 கிலோ கஞ்சா பறிமுதல் கோழி வியாபாரி கைது
வாணியம்பாடி ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஷான்பாஷா என்பவரின் வீட்டில் நேற்று போலீசார் சோதனை மேற்கொண்டபோது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஷான்பாஷாவை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் கோழி வியாபாரத்தின் போது கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர் மீது வழக்குபதிவு செய்து நேற்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.