காளையார்கோவில்: காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே பொதுமக்களுக்கு இடையூறாக தேர்தல் பிரச்சாரம் செய்ததாக பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் மீது வழக்கு
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பஸ் ஸ்டாண்ட் அருகே பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் பில்லப்பன் என்பவர் தனது கட்சி உறுப்பினர்களை கூட்டி தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக பறக்கும் படை சிறப்பு தாசில்தார் உமா மகேஸ்வரி காளையார் கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.