தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பண்ணைக்காட்டில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் ... சுமார் 68 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ள இந்த துணை மின் நிலையத்தால் 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் எனவும் இதனால் இந்த கிராமங்களில் மின் தட்டுப்பாடு முழுவதுமாக நீங்கும் என பொதுமக்கள் நிம்மதி தெரிவித்துள்ளனர் ... மேலும் கீழ் மலை கிராம மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கை இன்று நிறைவேறி உள்ளது பொதுமக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.