கோவை வடக்கு: கோவை: வடவள்ளி பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து - பெரும் கரும்புகையால் மக்கள் அவதி
கோவை வீரகேரளம் சாலையில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் மின்கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3500 சதுர அடி பரப்பிலான குடோன் எரிந்து சேதமடைந்தது. உயிர் சேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.