செங்கம்: செங்கம் பகுதியில் விடிய விடிய பெய்த மழை: மகிழ்ச்சியில் விவசாயிகள்!
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள 44 ஊராட்சிகளில் நேற்று இரவு பெய்த மழையால் நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. நீண்ட நாட்களாக மழைக்காகக் காத்திருந்த விவசாயிகள், நிலங்களில் நீர் தேங்கியுள்ளதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.