கலவை: கலவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர்
ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இறுதி போட்டியினை இராணிப்பேட்டை அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தொடங்கி வைத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் பரிசு கோப்பைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வில் அதிமுக முன்னணி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.