அரியலூர்: அரியலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் கடும் துர்நாற்றம்: கம்யூனிஸ்ட் கட்சியினர் வலியுறுத்தல்
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி சவக்கிடங்கில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால், சவக்கிடங்கை தூய்மைப்படுத்தவும், பழுதான குளிர்சாதனப் பெட்டிகளைச் சீரமைக்கவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.