கீழக்கரை: ஏர்வாடி அருகே காட்டுப்பகுதியில் 2 பேர் மர்ம மரணம்: போலீசார் தீவிர விசாரணை
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே சின்னமாயாகுளம் பகுதியில் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மூக்கு மற்றும் கண்ணில் ரத்தம் கசிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவம் குறித்து போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.