கிணத்துக்கடவு: நெகமம் செளடேஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற கத்தி போடும் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.
பெரிய நெகமம் பகுதியில் அமைந்துள்ளது ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடப்பு ஆண்டும் நவராத்திரி விழா சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. நவராத்திரி விழாவின் நிறைவு நாளையொட்டி தேவாங்க சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் ராமலிங்க செளடேஸ்வரி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. விநாயகர் கோயிலில் இருந்து செளடேஸ்வர