எரியோட்டில் அரசு மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடை முக்கிய பகுதியில் இருப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு அடிதடி வெட்டு குத்து ஏற்பட்டு நான்கு வழக்குகள் எரியோடு போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசாரே இந்த இடத்தில் மது கடை வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இப்படி சூழ்நிலையிலும் கடை அகற்றப்படாமல் இருப்பதால் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று மாலை கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.