இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் கடந்த 4ம் தேதி முதல் SIR என சொல்லப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது.ஒரு புறம் ஆளுங்கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த SIRஐ எதிர்த்து வந்தாலும் கூட,தற்போதைய பிரதான எதிர்கட்சியான அதிமுக இந்த SIRஐ வரவேற்று உள்ளது.மேலும் இந்த SIR பணிகளில் திமுகவினரின் தலையீடுகள் உள்ளதால் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு அதிமுகவினரே நேரடியாக கள ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.