பெரம்பலூர்: அரியலூர் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் கடும் துர்நாற்றம்: மக்கள் கடும் அவதி!
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்கில் போதிய பராமரிப்பு இல்லாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சவக்கிடங்கை உடனடியாகச் சீரமைக்க கம்யூனிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.