தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை பகுதியில் கழிவு நீர் அடைத்து நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதிமுக வடசென்னை வடகிழக்கு மாவட்ட செயலாளரிடம் பொதுமக்கள் குற்றச்சாட்டு
கொருக்குப்பேட்டை சிகரெிழந்த பாளையம் இரண்டாவது தெருவில் புதியதாக சாலை அமைக்க பழைய சாலையை உடைக்கும் போது அங்கு சரிவர பராமரிக்கப்படாத சேதமடைந்த சாக்கடை குழிக்கு அருகில் இருந்த பள்ளத்தில் மூன்று வயது குழந்தை ஒன்று விழுந்து பின்னால் வந்த குழந்தையின் தாய் காப்பாற்றியுள்ளார். அதன் பிறகும் கூட மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் இது குறித்து குற்றச்சாட்டினை முன் வைத்துள்ளனர். குழந்தை பள்ளத்தில் விழும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது