செங்கம்: மேல் செங்கம் சோதனை சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்: சாலை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் சோதனை சாவடி அருகே சாலை விரிவாக்கம் செய்யப்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அரை மணி நேரத்திற்கும் மேலாக வாகனங்கள் சிக்கித்தவித்த நிலையில், விபத்துகளைத் தவிர்க்க சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.