ஆம்பூர்: நேதாஜி சாலையில் உள்ள முஹமத்புரா மசூதி எதிரில் ஐ லவ் முஹமத் என்ற வசனத்துடன் கூடிய பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்
உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ராவத்பூர் சைத் நகரில் மீலாதுநபி விழாவை முன்னிட்டு இஸ்லாமியர்கள் முஹமத் நபியை நேசிக்கிறோம் என்று பேனர் வைத்தது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அதனை கண்டிக்கும் வகையில் ஆம்பூர் நேதாஜி சாலையில் உள்ள முஹம்மத்புரா மசூதி எதிரில் இன்று பிற்பகல் ஐ லவ் முஹம்மத் என்ற பதாகை ஏந்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.