ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
சென்னை நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர் ராஜீவ் காந்தி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாக்கப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர்கள் மற்றும் குமாஸ்தாக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.