திண்டுக்கல்லில் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் தலைமை செயல் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் ஆர். நடராஜன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.